
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிப்பது என்பது அதிமுகவின் முடிவுதான். திமுக போலியான வெற்றியை பெறுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது.
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 2500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்த போது அப்போது ஸ்டாலின் 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டிதானே என்று கூறினார். தற்போது பொங்கல் பரிசாக 5000 ரூபாய் கொடுக்க வேண்டாம் 2500 ரூபாயாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அது கூட அவர்கள் கொடுக்கவில்லை. மேலும் பொதுமக்கள் திமுக ஆட்சியின் மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்று கூறினார்.