சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றது. அதனைப் போலவே வேலூர் கண்டோன்மெண்ட் மற்றும் அரக்கோணம் இடையே தினமும் காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் மறுமார்க்கமாக 2.05 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ஜனவரி 24ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கோவையில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், மைசூரில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் லால்பாக் விரைவு ரயில்அனைத்தும் ஜனவரி 24ஆம் தேதி காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.