தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித் தகுதிகளுக்கு ஏற்றவாறு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி உடையவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது கட்டாயம். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரத்தின்படி தமிழகம் முழுவதும் சுமார் 67.7 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்பதாக அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 36. 14 லட்சம் ஆண்கள், 31.60 லட்சம் பெண்கள்,அடுத்ததாக 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் 27.95 லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.