இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.பொதுவாக ரயிலில் பயணிக்கும் மக்கள் அனைவரும் ஐ ஆர் சி டி சி தளத்தின் மூலம் தங்கள் டிக்கெட்டை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த டிக்கெட்டில் நாய் மற்றும் பூனை அழைத்துச் செல்ல அனுமதி கிடையாது.
ரயிலில் கூப்பே கொச்சை புக் செய்தால் மட்டுமே செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல முடியும் என்ற நிலையில் ஐ ஆர் சி டி சி செல்லப்பிராணிகளுக்கு தனியாக டிக்கெட் வழங்கும் வசதி கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாய் மற்றும் பூனை மட்டுமல்லாமல் யானை, குதிரை, பறவைகள் மற்றும் முயல் போன்ற விலங்குகளுக்கும் இது பொருந்தும். இதன் மூலமாக உங்கள் செல்ல பிராணிகளை குறைந்த செலவில் ரயில் பயணத்தில் கூட்டிச் செல்ல முடியும்