இந்திய ரயில்வேயில் வேலை தேடுபவர்கள் பலர். இதனால் அவர்களுக்காக தினசரி அரசு வேலைகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகிறது. தற்போது கபுர்தலாவிலுள்ள ரயில்வே கோச் பேக்டரியில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 550 பணி இடங்கள் இந்த அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்பு வாயிலாக நிரப்பப்படும்.

கடைசி தேதிக்கு முன் அதிகாரப்பூர்வமான வலைத்தளம் rcf.indianrailways.gov.in வாயிலாக ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவேண்டும். விண்ணப்பிப்பதற்குரிய கடைசிதேதி மார்ச் 31 ஆகும். அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) அதற்கு இணையான சான்றிதழ் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றிருக்கவேண்டும். 2023ம் வருடம் ஆர்சிஎஃப் அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கான தகுதி குறித்த கூடுதல் தகவல்களை பெற ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் படிக்க வேண்டும்.