நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் அடிப்படையில் ரேஷன் கடை வாயிலாக  உணவு பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பேரிடர் காலங்களில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மீதான விவாதம் ஒன்று நடந்தது. அப்போது அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது, இப்போது மத்திய அரசு சார்பில் 1.9 கோடி ரேஷன் கார்டுதாரர்களை ஏழைகளாக அங்கீகரித்து ரேஷன்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநில அரசு சார்பில் ரேஷன் கார்டுகளில் 95 லட்சம் பேர் பயன்பெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார். தெலுங்கானாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 53 லட்சம் ரேஷன் கார்டுகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. தற்போது இதனுடன் கூடுதலாக 35 லட்சம் ரேஷன் கார்டுகளை அரசு வழங்கி உள்ளதாக அறிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி மாநில அரசு சார்பில் கூடுதலாக மானியம் வழங்கப்பட்டு 88 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 6 கிலோ அரிசி வழங்கப்படுவதாகவும், கிலோ ஒன்று 1 ரூபாய்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.