சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது சாதாரண பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் 20 ரூபாய் வரை கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.