கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தர கன்னடா மாவட்டத்தில் 20 நாட்களாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

இந்த மாதம் 25ஆம் தேதிக்கு முன்பு ஐந்தாயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் 120 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 3 – 8 நாட்களுக்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், குளிர், தலைவலி மற்றும் தசை வலி உருவாகின்றது. எனவே மக்கள் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.