இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பல பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயிலில் பெரும்பாலும் பயணம் செய்யும் பயணிகள் ஐஆர்டிசி தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் தற்போது ரயில் முன்பதிவில் ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரயில் டிக்கெட்டை யார் பெயரில் முன்பதிவு செய்கிறோமோ அவர்கள் மட்டும்தான் ரயிலில் பயணம் செய்ய முடியும். ஆனால் தற்போது புதிய விதிமுறையின் படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் குடும்பத்தினர் பெயரை தங்கள் பெயர்களுக்கு பதிலாக மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பெயரை மாற்ற முடியாது. குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை மட்டும் தான் மாற்ற முடியும். இதற்கு நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் காகிதத்தை எடுத்துக்கொண்டு ரயில்வே நிலையத்தில் உள்ள பயண சீட்டு கவுண்டருக்கு செல்ல வேண்டும். அங்கு யார் பெயரில் டிக்கெட்டை மாற்ற வேண்டுமா அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் யார் பெயரில் ரயில் டிக்கெட் மாற்ற விரும்புகிறீர்களா அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். மேலும் ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் டிக்கெட் மாற்ற வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. அதோடு ஒரு டிக்கெட்டை ஒரு முறைக்கு மேல் மற்றொரு முறை வேறு ஒருவர் பெயருக்கு மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.