ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. முக்கிய சாட்சியான ராஷிக்கின் உதவியுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் வரைபடம் ஒன்றை காவல்துறையினர் தயார் செய்து வெளியிட்டனர்.

இந்நிலையில் கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 3 பயணிகள் உயிரிழந்த நிலையில், ரயிலுக்கு தீவைத்த நபரை காவலதுறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.