மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.