புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து பெருமநாடு சாலையில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் வீரத்தங்காள் ஒட்டி வந்த மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரத்தங்காளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.