இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். அதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகை மற்ற சேமிப்பு திட்டங்களை விட அதிகம். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் இந்த வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை நீங்கள் இதில் முதலீடு செய்யலாம். 60 வயது பூர்த்தி அடைந்த யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். அதே சமயம் வயது முதிர்வாழ் ஓய்வு பெற்றவர்களும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்பாக வேண்டுமானால் அசல் தொகையை எடுக்கலாம் எனவும் அதற்கு 1.5 சதவீதம் வரை பற்றி பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருட முதிர்வு கால முடிந்த பிறகு வேண்டுமானால் நீட்டிப்பு செய்து கொள்ளலாம் என வருமான வரி சட்டத்தின் கீழ் விலக்கும் உள்ளது.