நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட புதிய திட்டம் அறிவிக்கப்படும். மூன்று முதல் ஆறு புள்ளி ஐந்து சதவீதம் வரை ஆண்டு வட்டியில் ஒன்பது லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.