நாட்டில் சில பருப்பு வகைகளின் தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் பதுக்களை தடுக்க மற்றும் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைக்க உளுந்து பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு தொடர்பாக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் வரம்பு நிர்ணயம் செய்தது. சந்தையில் போதுமான அளவு துவரம் பருப்பு மற்றும் உளுந்து கிடைப்பதை உறுதிப்படுத்த இருப்பு வரம்புகளில் மீண்டும் திருத்தம் மற்றும் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் 5 டன் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் கிடங்கில் 50 டன் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஆலை உரிமையாளர்கள் தங்களின் கடைசி ஒரு மாத உற்பத்தி அல்லது ஆண்டு உற்பத்தியில் 10% ஆகிய இரண்டில் அதிகமான அளவை இறப்பு வைத்துக் கொள்ளலாம். டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இருப்பு வரம்புகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரம்பை மீறி இருப்பு வைத்திருக்கும் நிலையில் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பை அந்தந்த நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.