நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் அடுத்தடுத்து மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தனர். நடுத்தர வயதினர், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என தற்போது பலதரப்பட்டவர்களுக்கும் மாரடைப்பு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொஹித் சவுத்ரி என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தய பயிற்சியில் கலந்து கொண்டான். மாணவன் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் பள்ளி நிர்வாகம்  மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.