தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையானது நடைமுறையில் உள்ளது. மின் ஊழியர்கள் பயனர்களின் வீடுகளுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து மின் அட்டையில் பதிவிடுவார்கள். இந்த கட்டணம் குறித்த விவரம் மின்பயனர்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக செல்போன் செயலி வாயிலாகவே மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கென்று உருவாக்கப்பட்ட செயலியானது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண விதமாக 63 லட்சம் செலவில் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக புதிய செயலி ஒன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை மின்வாரியம் தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கவும், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.