தமிழகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மின் நுகர்வோர்கள் மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இந்த வேலைகளை முடித்துக் கொள்ளலாம். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கடைசி நாளாகும்.

இந்நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு என்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனவும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான் என்று கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.