வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் அனைவருக்கும் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டம் தான் அடல் ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகையாக மாதம் தோறும் சந்தாதாரருக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதே சமயம் வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். ஏதாவது காரணத்தால் சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்.

இருவருமே உயிரிழந்து விடும் பட்சத்தில் அந்த பென்ஷன் தொகை நாமினிக்கு வழங்கப்படும். சந்தாதாரர் 60 வயது பூர்த்தி அடையும் போது மட்டுமே இந்த திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் பெற முடியும். மேலும் 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரால் இந்த அடல் பென்ஷன் திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. ஆனால் அவர் இறக்கும் பட்சத்தில் பென்ஷன் தொகை அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான காலம் முடியும் முன்பாகவே அவரின் வாழ்க்கை துணைக்கு அல்லது அவரின் நாமினிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.