பொதுவாகவே அனைத்து வீடுகளிலும் கரப்பான் பூச்சி, தவளை மற்றும் பல்லி உள்ளிட்ட ஊர்வணங்கள் தொல்லை அதிகமாகவே இருக்கும். பல்லி சுவரில் இருக்கும் அல்லது மூலைகளில் இருந்து நம் மீது விழுந்தால் பலருக்கும் அது அருவருப்பாக இருக்கும். எனவே பல்லியை வீட்டிலிருந்து துரத்துவதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

பொதுவாக பல்லிகளுக்கு முட்டையின் வாசனை பிடிக்காது. இதனால் முட்டை ஓடு இருக்கும் இடத்திற்கு அவை வராது. எனவே பல்லி வரும் இடத்தை சரியாக பார்த்து அந்த இடத்தில் முட்டை ஓடுகளை வைத்தால் அங்கு அவை திரும்ப வராது.

பல்லிக்கு பூண்டு வாசனை அறவே பிடிக்காது. இதனால் பூண்டின் சாற்றை எடுத்து அதனை தெளித்தால் பல்லி வீட்டிற்கு வராது

காபி தூளையும் புகையிலையும் ஒன்றாக கலந்து கதவு மற்றும் ஜன்னல்களின் பக்கத்தில் உருண்டையாக வைத்தால் பல்லி வீட்டு பக்கம் வராது.

அதனைப் போலவே பல்லி வரும் இடத்தில் மயிலிறகு வைத்தால் இனி அந்த பக்கம் அவை திரும்பி பார்க்காது.