வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய குடும்ப வடிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூர்யா குடும்ப வடிவியல் ஆய்வு மையம் அறிவித்த நிலையில் அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு இந்தியாவில் அந்தமான், அருணாசல பிரதேசம் ஓரிரு மாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.