கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இருந்து தெசலோனிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே சரக்கு ரயிலுடன் மோதியது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு 85 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. மேலும் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.