மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக கப்பல் தோற்றத்தில் வீடு கட்டி அசத்தியுள்ளார் மறைன் இன்ஜினியர் ஒருவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவர் மரைன் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சுபாஷின் மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிகளுக்கு கப்பல் போல வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள வண்ணாரபாளையம் பகுதியில் ஆறு அறைகள் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய கப்பல் போன்ற தோட்டத்தில் ஒரு அழகான வீட்டை கட்டி உள்ளனர். இந்த வீட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டி வந்த நிலையில் தற்போது அதன் வேலைகள் முடிவடைந்துள்ளது.