சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன் ஒரு மாத விடுமுறை காரணமாக தற்போது ஊருக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நம்பிராஜன் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் நம்பிராஜன் தற்கொலைக்கான பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.