கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சவுந்தரராஜ், பாலகுரு இருவரும் கூலித் தொழிலாளர்கள். கொத்தனார் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவரின் உடல்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.