பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பரில் அதிக மழைப்பொழிவு, சில மாவட்டங்களில் இயல்பை விட 75 சதவீதம் அதிகமாக மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது..