
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
நாளை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.