தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் உருவாகி வலுவிழந்த நிலையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவிதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.