
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம் எந்த நகலையும் நாம் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை பயன்படுத்தலாம். இந்நிலையில் டிஜி லாக்கரில் ஆவணங்களை எப்படி பதிவேற்றம் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் டிஜி லாக்கரின் அதிகாரப்பூர்வ இணையதளமான digilocker.gov.in என்ற முகவரிக்குள் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு செல்போன் நம்பர் உள்ளிட்ட தேவையான பிற ஆவணங்களையும் சரிபார்ப்பு செயல்முறையுடன் பதிவு செய்துவிட்டு, அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு பதிவேற்ற ஆப்ஷனை க்ளிக் செய்துவிட்டு நீங்கள் பதிவு செய்ய ஆவணத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு டாக் வகையை தேர்ந்தெடு என்பதை கிளிக் செய்து விட்டு சேமி என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய கோப்புகளை jpeg, png, pdf உள்ளிட்ட பைல்களை பயன்படுத்தி மட்டும்தான் சேமித்துக் கொள்ள முடியும். நீங்கள் பதிவேற்றம் செய்த கோப்புகளில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் கோப்பு பெயருக்கு அடுத்து உள்ள திருத்து என்ற ஆப்ஷனை தேர்வு செய்து திருத்தம் மேற்கொள்ளலாம். மேலும் டிஜி லாக்கரில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்கள் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மட்டும் தான் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.