தமிழக அமைச்சர் த.மோ அன்பரசன் பேசிய விஷயம் தற்போது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. அதாவது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் திமுக கழகத்தை இனி யாராலும் அழிக்க முடியாது. 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே ஒரு இயக்கம் திமுக மட்டும் தான். இன்றைய இளைஞர்கள் செல்போன் பார்ப்பதில் கவனத்தை செலுத்துகிறார்கள். நம்முடைய தலைவர் சிறப்பான முதல்வராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். நாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும்தான் மக்கள் 3 வேலையும் சாப்பிடுகிறார்கள். மகாராஷ்டிரா உட்பட மற்றும் மாநிலங்களில் மக்கள் ஒருவேளை மட்டும்தான் உணவு உண்ணுகிறார்கள். திமுக அரசு ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசியும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயும் கொடுக்கவில்லை எனில் இன்று பல குடும்பங்கள் தமிழகத்தில் பட்டினியாகத்தான் கிடக்கும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்ஒருவர் வெளியிட்ட பதிவை ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திமுக அமைச்சர் அன்பரசன் அவர்களே நாக்கை அடக்கி பேச வேண்டும். மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து தான் நீங்கள் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள். மேலும் மக்கள் யாரும் அரசிடம் கையேந்தி நிற்கவில்லை. உழைத்து தான் சாப்பிடுகிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
திமுக அமைச்சர் தாமோதரன் அன்பரசன் அவர்களே நாக்கை அடக்கிப் பேச வேண்டும் மக்களுடைய வரி பணத்தை எடுத்து தான் நீங்கள் மக்களுக்கு சேவை செய்றீங்க
✍️💪மக்கள் யாரும் அரசிடம் கையேந்தி நிற்கவில்லை உழைத்து சாப்பிடுகிறார்கள்#DMK #Minister #Anbarasan #KalaingarMagalirUrimaithogai https://t.co/7SEvQxlOgL— balamurugan (@chefbalaa) December 6, 2024