இந்திய அஞ்சல் துறை நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அஞ்சல் துறை திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு வைப்புத் தொகை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன்பது லட்சமாக இருந்தது தற்போது 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் உச்சவரம்பு 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏழு புள்ளி நான்கு சதவீதம் வட்டி தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 5.5 முதல் 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பெண்களுக்கு மகிலா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்ற புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.