உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பணியில் இருக்கும் போது சீருடை ரீல்ஸ் செய்யவும் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு முன்பு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே இனி எந்த ஒரு காவல் அதிகாரியும் பணியில் இருக்கும் போது வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.