வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கும் வறுமையை ஒழிப்பதற்கு பயன்படுவது இல்லை என்று குறிப்பிட்டார். ஏழை எளிய மக்களை பாதுகாக்கும் அம்சங்கள் பட்சத்தில் இடம்பெறவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மோசடி செய்துள்ள அதானிக்கு எதிராக பிரதமர் மோடியும் அமலாக்க துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.