அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில்  கரையை கடந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் தண்டவாளங்கள்சேதமடைந்துள்ளன. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார்.
மேலும் சேதமான வழிதடத்தில்  செல்லும்  ரயில்கள் உடனடியாக வேறு பாதைக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.