டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், TRBராஜாவுக்கு CM ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார்.முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பொறுப்பேற்ற ராஜா, டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான சிறந்த திட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என உறுதிகூறியதோடு, விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க நிலம் வழங்க மக்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.