ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும்” என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2013ல் தமிழக அரசு குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.25 ஆகவும், 1கி.மீ.,க்கு ரூ.12 ஆகவும் நிர்ணயித்தது. அப்போதைய பெட்ரோல் விலை ரூ.60.50. தற்போது பெட்ரோல் ரூ. 100க்கு மேல் விற்பதால் விலையை ஏற்ற கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு பேருந்து கட்டணம் கூட 2013க்கு பிறகு இரண்டு முறை அதிகரிக்கப்பட்டது. எனவே ஆட்டோ ஓட்டுநர்களுடைய வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு குறைந்தபட்ச கட்டணத்தை 50 ஆகவும், கிலோமீட்டர் ஒன்றுக்கு 25 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.