நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குடிமக்களின் அந்தரங்கத்தை அரசு அ =மைப்புகள் வேவு பார்ப்பதை தடுப்பதற்கு இந்திய அரசமைப்புச் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் ஏதேனும் வழிமுறை செய்யப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் பெற்ற பிறகு சட்ட அமலாக்க முகமைகளால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. உளவு பார்க்கப்படுகிறது என்று கூறினார். மேலும் சட்டபூர்வமாக அனுமதி பெற்ற பிறகு பொதுமக்களின் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாகவும் கூறினார்.