உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையானது  சமூக ஊடக கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள்அனைவரும்  பணியின் போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்கள் பதிவிடுவது, பணி நேரத்தில் காரணமின்றி அரட்டை அடிப்பது, மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை அனைத்து காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும் என்று உ.பி. டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.