தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை ரேசன் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்குவார்கள். இதில் அரசியல் தலையீடு இருக்காது என உறுதியளித்திருக்கிறார்.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் அனைத்தையும் திமுகவினருக்கே வழங்கியுள்ளனர், பொதுமக்களுக்கு வழங்கவில்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் திருமுல்லைவாயில், கோவையின் பல பகுதிகளில் டோக்கன்கள் அனைத்தும் திமுகவினருக்கு வழங்கியுள்ளனர். பல இடங்களில் திமுகவினர் குளறுபடி செய்கின்றனர், இவற்றை முதல்வர் உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என அண்ணாமலைவேண்டுகோள் விடுத்துள்ளார்.