பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு 3 1/2 வயதாகிறது. இவருடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தம்பதிகளின் இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு இருந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான பாதிப்பு இருந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த பெண் தன்னுடைய ஒரு குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதாவது ஆட்டிச குறைபாடு இருப்பதால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று நினைத்து கவலைப்பட்டதாக குழந்தையை கொன்றதாக தாய் கூறியுள்ளார்.

அவர் குழந்தையை கொலை செய்த பிறகு போலீசில் தானாகவே சென்று சரணடைந்தார். பின்னர் அந்த பெண்ணின் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தை இன்னும் வெளிநாட்டில் இருந்து வராததால் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாய் சிறைக்கு சென்று விட்டார். இதனால் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.