மதுரை மாவட்டத்திலுள்ள கட்டப்புலி நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை சுரேஷ்பாண்டி தேனூர் டாஸ்மாக் எதிரே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படித்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி சுரேஷ் பாண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சுரேஷ் பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மதுபோதையில் சுரேஷ் பாண்டி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.