
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரனும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது.
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேச வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் யோசித்து தான் பேச வேண்டும். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது சீமான் இந்த கருத்துகளை கூறுகிறார் என்றால் இடைத்தேர்தலை மனதில் வைத்து தான். திமுகவுக்கு எதிரானாக வாக்குகளை பெறுவதற்காக சீமான் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன். மேலும் பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை பேசி மக்களை திசை திருப்ப முடியாது என்று கூறினார்.