கோவை அருகில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது “யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்ம மரணம் அடைந்தது குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக கோவை அருகில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தில் தொடரக்கூடிய மர்மமான மரணங்கள் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.