இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கன்யா சுமங்களா யோஜனாஎன்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு மாதம் தோறும் 4500 ரூபாய் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இந்த செய்தி தொடர்பாக அரசின் உண்மை சரிபார்ப்பு நிறுவனமான PIB Fact Check வெளியிட்டுள்ள செய்தியில், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து அரசாங்கத்தின் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் விளக்கியதில் இந்தத் திட்டம் எதுவும் அரசு சார்பாக அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் இதிலிருந்து யாருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.