இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியோருக்கு இஎம்ஐ உயரும். ஹெச்டிஎஃப்சி வங்கி தற்போது தனது கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வு மே 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்த வட்டி உயர்வால் இஎம்ஐ உயரக்கூடும்.

புதிய MCLR வட்டி:

ஓவர்நைட் – 7.95%

1 மாதம் – 8.10%

3 மாதம் – 8.40%

6 மாதம் – 8.80%

1 ஆண்டு – 9.05%

2 ஆண்டு – 9.10%

3 ஆண்டு – 9.20%