தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. கடந்த மாதமும் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தற்போது ரேஷன் அட்டை தருமாறு பொதுமக்கள் கேட்டால் பதில் இல்லை. எப்போது வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.