இந்திய சட்ட குறியீடு, இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பெயர்களில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சமீபத்தில் அறிவித்திருந்தார். நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பிற்கு புதிய சட்டங்கள் மிகவும் முக்கியமானது.

குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சாதாரண குற்றங்களில் போலீஸ்காவல் 15 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 20 குற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன.