பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி பண்டிகையின் போது பொதுமக்கள் யாரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழைய பொருட்களை மாநகராட்சி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியும் பொது மக்களிடம் பழைய பொருட்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, போகி பண்டிகையின் போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதற்கு பதிலாக முறையாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு கிழக்கு மண்டலத்தில் வார்டு வாரியாக 60 உழவர் சந்தை சிங்காநல்லூர், 60 சிங்காநல்லூர் பேருந்து நிலையம், 60 வரதராஜபுரம் கல்யாண மண்டபம், 52 சந்திரகாந்தி நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 6 காளப்பட்டி நால்ரோடு, 23 சித்ரா கார்னர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு மண்டலத்தில் வார்டு வாரியாக 34 கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 71 சாஸ்திரி மைதானம் ஆர்எஸ் புரம், 37 வடவள்ளி சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகம், 75 பனைமரத்தூர் குப்பை சுழற்சி மையம் போன்றவற்றிலும், வடக்கு மண்டலத்தில் வார்டு வாரியாக, 26 விளாங்குறிச்சி ரோடு குப்பை மறுசுழற்சி மையம் பீளமேடு, 18 ராமசாமி நகர் நுண் உரம் செயலாக்க மையம் மற்றும் வார்டு அலுவலகம் கவுண்டம்பாளையம், 20 கேஆர்ஜி நகர் கணபதி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 3 சின்ன வேடம் பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 4 சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், 2 துடியலூர் சந்தை நுண் உரம் செயலாக மையம் போன்றவற்றிலும் பழைய பொருட்களை வழங்கலாம்.
இதைத்தொடர்ந்து தெற்கு மண்டலத்தில் வார்டு வாரியாக 100 தருண் ரெசிடென்சி கணேசபுரம், 90 கோவை புதூர் சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகம், 86 புல்லுக்காடு குப்பை மறுசுழற்சி மையம், 79 சொக்கம்புதூர் குப்பை மறுசுழற்சி மையம் போன்றவற்றில் பழைய பொருட்களை வழங்கலாம். மேலும் மத்திய மண்டலத்தில் காந்திபுரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கிராஸ் கட் ரோடு சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகம், டிகே மார்க்கெட், உக்கடம் மார்க்கெட், ராஜவீதி தேர்த்திடல், செட்டி வீதி கழிப்பிடம் அருகில், ரேஸ் கோர்ஸ் சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகம் மற்றும் ரயில் அருகில் போன்றவைகளில் குப்பைகள் சேகரிக்கப்படும் ஈன்று மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.