சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விழகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு ஜனவரி 12-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்து 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதோடு மீனவர்களுக்கான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.