தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஒழுங்கு நிலை குறித்த முதல்வரின் கருத்தை ஏற்க மறுத்து சட்டசபையை விட வெளியேறிவிட்டார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் விருகம்பாக்கம் சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கூறினார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார். இந்நிலையில் ராமநாதபுரம், பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் மரணம் யாருடைய ஆட்சியில் நிகழ்ந்தது என்று முதல்வர் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய முதல்வர், மதுரை ஜெயந்தி விழாவில் நடைபெற்ற வெடிகுண்டு வீச்சில் 4 பேர் மரணம், சிவகங்கை திருப்பாச்சேச்சி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படுகொலை செய்யப்பட்டது கடந்த 2012-ம் ஆண்டில், குமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், கூடங்குளம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்துச் சென்றது, அவருடைய கை துப்பாக்கி காணாமல் போனது இதெல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது. எல்லாம் அதிமுக ஆட்சியில் தான். பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா அதிமுக ஆட்சியில் செல்வதற்கு.

வன்னியர் சங்க மாநாட்டின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் 100 வாகனங்கள் எரிக்கப்பட்டதோடு, 1000 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக போராட்டம் நடத்திய மக்களின் மீது தடியடி நடத்தி பொதுமக்களின் வாகனங்களை காவல்துறையினரை தீயிட்டு கொளுத்தியது, சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டது என அதிமுக ஆட்சியில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் திமுக ஆட்சியில் நடைபெற்றது கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசியல் பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சி என்று பாராமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் ஆட்சி தான் திமுக. எனவே எதிர்கட்சித் தலைவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இது செய்ய பதிலாக சொல்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.